விக்ரமுக்கு சேது போல உதயாவுக்கு அக்யூஸ்ட் அமையும்: ஆர்.கே.செல்வமணி நம்பிக்கை

6 months ago 9
ARTICLE AD BOX

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் படம், ‘அக்யூஸ்ட்’. இதை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். நரேன் பாலகுமார் இசையமைக்கிறார். மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “நடிகர் உதயாவுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அவரை எந்த அவமானமும் பாதிக்காது, விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது” என்றார்.

Read Entire Article