ARTICLE AD BOX
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.
மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.
அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது.
விஜய் சேதுபதி - இயக்குநர் ராம்2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மகாராஜா, விடுதலை 2 படத்துக்காக விஜய் சேதுபதி பெற்றார். இந்த விருதினை இயக்குநர் ராம் வழங்கினார்.
விருது வழங்கி பேசிய ராம், ``நடிகர் விஜய் சேதுபதி ரொம்ப எளிமையா இருக்கறதால அவரை நமக்குத் தெரியலை. 2024-ல் ராட்டர்டாம்ல `விடுதலை'க்காக அவர் வந்திருந்தாரு, `ஏழு கடல் ஏழு மலை'க்காக நான் போயிருந்தேன். அங்க ஒரு ஆடிட்டோரியத்துக்கு வெளியே நாங்க நின்னுக்கிட்டு இருந்தோம்.
அப்போ ஒருத்தர் வேகமாக ஓடி வந்து பேசினார். மொதல்ல அவர் தமிழ்க்காரர்னு நினைச்சேன். அப்புறம் ஆந்திரா, கர்நாடகாக்காரர்னு நினைச்சேன். அவர் இந்தியில பேசவும் பீகார், உ.பி-னு நெனச்சேன். ஆனா, அவரு பாகிஸ்தான்ல இருந்து வந்திருந்தார். எப்படி பாகிஸ்தான்காரர் அவரைப் பார்த்தார்னு தெரியலை.
விஜய் சேதுபதிஅதுதான் அவர் (விஜய் சேதுபதி) அடைந்திருக்கக்கூடிய உயரம். எல்லோரும் இன்டெர்நேஷனல் ஹீரோனு சொல்லுவாங்க. ஆனா, தமிழகத்திலிருந்து, தமிழ் சினிமாவிலிருந்து உலகம் முழுக்க நடிப்புக்காகத் தெரியக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது அவர்தான். அவர் கால்கள் தரையில் பதிந்திருப்பதால், அவர் எவ்வளவு பெரிய இடத்துல இருந்தாலும் தெரிகிறார்" என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமாறன்!" - சேத்தன்
6 months ago
7





English (US) ·