'விஜய் மல்லையாவின் வீடியோவைப் பார்த்துதான்..!' - இயக்குநர் ராஜு முருகன் பேசியது என்ன?

6 months ago 7
ARTICLE AD BOX

இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், '96' படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'குட் டே' ( Good Day).

காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஜூன் 21) நடைபெற்றது.

Good Day movie Good Day movie

இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜு முருகன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்று நினைத்தேன். ஜி.நாகராஜன், வைக்கம் பஷீர் ஆகியோரின் புத்தகங்களைப் படித்த மாதிரியான ஒரு உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தி இருக்கிறது.

குடிப்பதைப் பற்றியதுதான் இந்தப் படம். ஆனால் குடிப்பதை மிகைப்படுத்துவது மாதிரியான படம் கிடையாது. அந்த குடிக்கானக் காரணத்தை ஒரு சமூகம் எப்படி உருவாக்குகிறது என்பதைப் பற்றி பேசக்கூடிய ஒரு படம்.

நான் குடிப்பதை நிறுத்தி 10 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய் மல்லையாவின் நான்கு மணி நேர பாட்காஸ்ட் வீடியோவைப் பார்த்துதான், `இன்று நான் குடிக்காமல் இருக்கிறேன். எவ்வளவு பெரிய மன உறுதியை அடைந்திருக்கிறேன்’ என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கடைசியாக நான் குடிப்பதை நிறுத்தியது 2009 பிரபாகரன் இறந்த செய்திகள் வந்துக்கொண்டிருந்தப்போதுதான். குடி என்பது நமக்கு மீண்டும் மீண்டும் குற்ற உணர்ச்சிகளை மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறது.

Good Day movie Good Day movie

இந்த சமூகத்தைப் பற்றி நாம் கவலைப்படலாம். இந்த சமூகம் நமக்கு கொடுக்கக்கூடிய அழுத்தத்தைப் பற்றி பேசலாம். ஆனால் சீர்திருத்தம் செய்வதற்கு செயல் மட்டும்தான் முக்கியம். அது எளிமையான  செயல், வலிமையான செயல் என்று அளவுகள் எல்லாம் இல்லை.

அதுபோல சினிமாவிலும் சிறிய படம், பெரிய படம் என்பதெல்லாம் இல்லை. அது ஏற்படுத்தக்கூடியத் தாக்கம் முக்கியம். இந்தப் படம் சிறந்த படத்தைப் பார்த்த ஒரு உணர்வைக் கொடுத்தது. ” என்று பேசியிருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article