விஜய் மிகப்பெரிய ஸ்டார்: வியக்கிறார் பாபி தியோல்

4 months ago 6
ARTICLE AD BOX

விஜய் நடித்துள்ள, ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். நடிகர் விஜய் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டதால் இது அவருக்குகடைசிப் படம் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் அளித்துள்ள பேட்டியில், "ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். விஜய் மிகப்பெரிய ஸ்டார். ஒரு நாள் ஷூட்டிங் எங்கு நடக்கிறது படக்குழுவிடம் கேட்டேன். செட் தான் ஒரே வழி என்றார்கள். தெருவில் படப்பிடிப்பை நடத்தினால், அவரை பார்க்க ஏராளமானோர் கூடிவிடுவார்கள்; படப்பிடிப்பை நடத்த முடியாமல் போகும் என்றார்கள். அந்த அளவுக்கு விஜய் கொண்டாடப்படுகிறார்.

Read Entire Article