ARTICLE AD BOX
Vijay : விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த மூன்றாவது ஆண்டில் சில நாட்களுக்கு முன்பு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இரண்டாவது நாளாக இன்று பரிசுகளை விஜய் வழங்கினார். அதில் சுவாரஸ்யமாக நடக்கும் நிகழ்வுகள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக மாணவ மற்றும் மாணவியர்கள் விஜய்யின் பஞ்ச் டயலாக்கை பேசுவார்கள்.
சிலர் அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறும்போது விஜய்யே அப்படி சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். மேலும் தளபதியின் ரசிகர் என்ற பெயரில் அவருடன் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.
விஜய்யை விமர்சித்த அரசியல் பிரபலம்
blue-sattai-maran இதை விமர்சித்து அரசியல் பிரபலம் வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ஒரு ரெண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே பெத்து வளர்த்த மகளை ஒரு சினிமா பிரபலத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அனுமதிக்கிறான்.
நாளைக்கு அந்தப் பெண் கல்லூரி முடித்து இன்னொருத்தருக்கு மனைவியாக போறவள். அந்த நடிகனை நான் குற்றம் சொல்ல மாட்டேன். அந்த அப்பாக்கள் தான் ஈனப்பிறவிகள். தமிழர்களா இவர்கள் என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
இதற்கு ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவு போட்டு இருக்கிறார். தன்னுடைய மகள் வயதுடைய மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கியிருக்கிறார். இதை இப்படியா கொச்சையாக விமர்சிப்பது. பெண்களை இந்த அளவிற்கு தவறாக பேசுவது அநாகரீகத்தின் உச்சம்.
விஜய்யின் அரசியல் வருகை உங்களுக்கு கடும் பீதியை கிளப்பி இருக்கிறதா வேல்முருகன் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார். விஜய்க்கு ஆதரவாக இப்போது ப்ளூ சட்டை மாறன் பேசி இருப்பது பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

6 months ago
8





English (US) ·