``வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிதியுதவி..'' - சுனில் கவாஸ்கர் அறிவிப்பு

8 months ago 8
ARTICLE AD BOX

முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி சமீப காலமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறார். அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சில நாள்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சச்சின் தெண்டுல்கரின் நண்பரான வினோத் காம்ப்ளி உடல் நலம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடியில் இருந்த போது கூட சச்சின் தெண்டுல்கர் அவருக்கு உதவ முன்வரவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

வினோத் காம்ப்ளி

சமீபத்தில் மும்பை வாங்கடே ஸ்டேடியத்தின் 50-வது ஆண்டு விழா நடந்தது. இதில் வினோத் காம்ப்ளி மிகவும் சிரமப்பட்டு கலந்து கொண்டார். அதோடு அதில் பங்கேற்ற சுனில் கவாஸ்கர் காலை தொட்டு வணங்கினார். அவரது உடல்நிலையை பார்த்த சுனில் கவாஸ்கர் உடனே அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.

இதற்காக வினோத் காம்ப்ளிக்கு இரண்டு வாரம் சிகிச்சை கொடுத்த டாக்டர் சைலேஷ் உள்பட இரண்டு பேரை சந்தித்து பேசினார். டாக்டர்கள் வினோத் காம்ப்ளியின் உடல் நிலை குறித்து தெரிவித்தவுடன் உடனே தனது சேம்ஸ் பவுண்டேசன் மூலம் வினோத் காம்ப்ளிக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

Sachin: நண்பனை சந்தித்த சச்சின்; நெகிழ்ந்த வினோத் காம்ப்ளி! என்ன நடந்தது?

இம்மாதம் முதல் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். அதோடு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ உதவித்தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று சுனில் கவாஸ்கரின் நெருங்கிய நண்பர் அனில் ஜோஷி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் 104 ஒரு தினப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள வினோத் காம்ப்ளிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் ஓய்வூதியம் வழங்கி வருகிறது.

சுனில் கவாஸ்கரின் சேம்ஸ் பவுண்டேசன் ஏற்கெனவே ஆல்ரவுண்டர் சலீம் துரானி என்பவருக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. தற்போது இரண்டாவது கிரிக்கெட் வீரராக வினோத் காம்ப்ளிக்கும் நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் கிரிக்கெட் பயிற்சியாளர் ரமாகாந்த் பிறந்தநாளில் அவரிடம் பயிற்சி எடுத்தவர்கள் ஒன்று கூடினர். இதில் வினோத் காம்ப்ளியும் கலந்து கொண்டார். அப்போது, வினோத் காம்ப்ளியால் சரியாக நடக்க முடியவில்லை. அவர் சச்சின் தெண்டுல்கர் கையை பிடித்துக்கொண்டு நடந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது.

மதுவுக்கு அடிமையான வினோத் காம்ப்ளி அடிக்கடி தான் வசிக்கும் கட்டிடத்தில் வசிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுண்டு. இதனால் அவரது மனைவி கூட விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.

`உதவியற்ற நிலையில் அவர் இருந்தார்' - விவாகரத்து மனுவை திரும்ப பெற்றது பற்றி வினோத் காம்ப்ளி மனைவி!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article