விமல், யோகிபாபுவின் கரம் மசாலா!

8 months ago 8
ARTICLE AD BOX

‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

“இந்த நவீன உலகத்தில் பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் வாழ்க்கை நடக்கிறது. உதாரணமாக வீடு, திருமணம், தொழில் அனைத்திலும் அவர்களின் பங்கு உள்ளது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை வைத்து படம் உருவாகியுள்ளது” என்கிறது படக்குழு.

Read Entire Article