விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்: நைஜீரிய நாட்டு இளம்பெண் கைது

4 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.20 கோடி மதிப்​புள்ள போதைப் பொருளை பறி​முதல் செய்த சுங்க அதி​காரி​கள் அதனை கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளம் பெண்ணை கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வெளி​நாடு​களில் இருந்து வரும் விமானங்​களை சுங்க துறை அதி​காரி​கள் கடந்த 23-ம் தேதி அதி​காலை தீவிர​மாக கண்​காணித்து வந்​தனர்.

அப்​போது, கத்​தார் நாட்டு தலைநகர் தோகா​விலிருந்​து, கத்​தார் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ஒன்​று, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை பரிசோதனை செய்​தனர்.

Read Entire Article