"விராட் கோலிதான் சிறந்த Clutch Player" - பாராட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்

1 month ago 2
ARTICLE AD BOX

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் இரண்டு சிறந்த ஐகான்கள். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இருந்த பகைமை இவர்களுக்கு இடையிலும் இருந்தது.

எனினும் தற்போது இருவரும் நட்புறவுடன் பழகி வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இருவரும் ஒரே ஃபார்மட்டில் விளையாடாததால் இனி அவர்கள் இணைந்து விளையாடுவதைப் பார்க்க முடியாது.

Steve SmithSteve Smith

களத்தில் Virat Kohli - Steve Smith உறவு

முதன்முதலாக இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய 2014 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அடித்துக்கொள்ளாத குறைக்குச் சண்டையிட்டதை ரசிகர்கள் மறக்க முடியாது. அது விராட்டும் ஸ்டீவும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டைக் காட்டிக்கொண்டிருந்த காலம்.

‘Goat Recognises Goat' என்ற பதத்துக்குப் பொருத்தமான இவர்கள், ஒருவர் மற்றொருவருக்கு மதிப்பளிக்கும் விதம் வியக்க வைக்கும். 2019ம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு களத்துக்கு வந்த ஸ்மித்தை ரசிகர்கள் கூச்சலிட்டு விமர்சித்தனர். அப்போது ரசிகர்களை ஸ்மித்துக்காக ஊக்கப்படுத்தச் செய்தார் விராட்!

கடைசியாக ஸ்மித் மற்றும் விராட் இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினர். ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸில் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார், இந்தப் போட்டியில் அணியை வழிநடத்தினார்.

மறுபுறம், விராட் கோலி 84 ரன்கள் எடுத்து POTM விருதையும் வென்றார். அந்த தோல்விக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து வெளியேறினார் ஸ்டீவ் ஸ்மித். அவரது ஓய்வுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் விராட்.

விராட்டைப் புகழ்ந்த ஸ்மித்

விராட் கோலியின் ஆட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், "விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர்தான் சிறந்த க்ளட்ச் பிளேயர். அவரின் ரன்களின் எண்ணிக்கை அசர வைக்கும் வகையில் இருக்கும். அவர் மிக மிகச் சிறப்பானவர்" எனக் கூறியுள்ளார்.

க்ளட்ச் பிளேயர் என்றால் அழுத்தம் நிறைந்த சூழலில் ரன்கள் சேர்த்துக்கொடுக்கும் வீரர் என்று பொருள்.

MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?
Read Entire Article