ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரை சேர்ந்தவர் மீனாட்சி(42). கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். மீனாட்சி வீட்டு வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி வெளியே சென்றார்.
பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த இரண்டரை பவுன் நகைகள், ரூ.35,000 பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

3 months ago
5







English (US) ·