ARTICLE AD BOX
தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடத்தி இருந்தார்.
அந்த மாநாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை விஜய் விமர்சித்து பேசியிருந்தார்.
குறிப்பாக ஸ்டாலின் அங்கிள், ராங் அங்கிள் என்று ஸ்டாலினைச் சாடியிருந்தார் விஜய்.
TVK மதுரை மாநாடு - விஜய்அவரின் இந்த பேச்சுக்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்ட சிலர் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 28) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் K.S ரவிக்குமாரிடம் விஜய்யின் இந்தப் பேச்சுத் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், " எனக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அனுபவமும் கிடையாது.
ஆனால் விஜய் பேசியது எதுவும் தவறாகத் தெரியவில்லை. அவர் நேரில் பார்த்தாலும் வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள் என்று தான் பேசுவார். அதைத்தான் அன்று பப்ளிக்கில் சொல்லி இருக்கிறார்.
அதற்கு வேறு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறான வார்த்தையே கிடையாது. அன்றைக்கு ஜனங்களை ஜாலிப்படுத்துவதற்காக அப்படி பேசி இருக்கலாம்" என்று K.S ரவிக்குமார் கூறியுள்ளார்.
"பிரதமர் MODI அவர்களே... STALIN அங்கிள்" | TVK Madurai மாநாட்டில் Vijay-ன் Fiery Speech | Vikatanசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
6





English (US) ·