ARTICLE AD BOX

கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு.
கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ் அய்யர் - பான்டிங் கூட்டணி பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிடல்ஸை அழைத்துச் சென்றது. 2020-ல் இறுதிப் போட்டியும் கண்டனர்.

7 months ago
8







English (US) ·