ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​!

1 month ago 3
ARTICLE AD BOX

புதுடெல்​லி: ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​ நடைபெற்​றது. விழாவில்​ புகைப்பட கண்​​காட்​சி இடம்​ பெற்​றிருந்தது. இந்​திய ஹாக்​கி அணி பல்​வேறு ஒலிம்​பிக்​ போட்​டிகள்​ மற்​றும்​ சர்​வதேச போட்​டிகளில்​ வெற்​றி பெற்​ற தருணங்​களின்​ வரலாற்​று சிறப்​புமிக்​க புகைப்​படங்​கள்​ இடம்​ பெற்​றிருந்​தன.

தொடர்​ந்​து ஹாக்​கி ஜாம்​பவான்​களான குர்​பக்​ஸ்​ சிங், அஸ்​லாம்​ ஷெர்​ ​கான்​, ஹர்​பிந்​தர்​ சிங்​, அஜித்​ பால்​ சிங்​, அசோக்​குமார்​, பி.பி.கோவிந்​​தா, ஜாபர்​ இக்​பால்​, பிரிகேடியர்​ ஹர்​சரண்​ சிங்​, வினீத்குமார்​, மிர்​ ரஞ்​சன்​ நேகி, ரோமியோ ஜேம்​ஸ்​, அசுந்​த லக்​ரா சுபத்​ரா பிர​தான்​ ஆகியோர்​ கவுரவிக்​கப்​பட்​டனர்​.

Read Entire Article