ARTICLE AD BOX

ஹாங் காங்: ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 7-ம் தேதி ஹாங் காங்கில் தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஹாங் காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவது பெருமையான விஷயம்.
இது உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்ட ஒரு தொடராகும். நம்பமுடியாத அளவிலான சாதனைகளை படைத்த வீரர்கள் அடங்கிய அணியை வழிநடத்த நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த கிரிக்கெட்டை விளையாடுவதே எங்களது நோக்கமாக இருக்கும்" என்றார்.

3 months ago
4







English (US) ·