ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

6 months ago 7
ARTICLE AD BOX

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

வெற்றி இலக்கான 301 ரன்களை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, ஜாஷ் ஹேசில்வுட்டின் 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லினால் 33.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி, தன் 2-வது இன்னிங்ஸில் 310 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஷமார் ஜோசப் அட்டகாசமாக வீசி 5 விக்கெட்டுகளை 87 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஷமார் ஜோசப் மே.இ. தீவுகளுக்கு ஒரு அரிய பொக்கிஷமாகத் திகழ்கிறார். அவரிடம் ஒரு கபில் தேவ் ஒளிந்திருக்கிறார். இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷமார் ஜோசப், 2-வது இன்னிங்சில் இறங்கி 22 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார். இவர்தான் மே.இ.தீவுகளின் 2வது இன்னிங்ஸில் அதிக ஸ்கோரை எடுத்தவர். முன்னதாக, ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்களை எடுத்தார்.

Read Entire Article