ARTICLE AD BOX
'பாகுபலி' புகழ் பிரபாஸ் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்குறாராம். அவருடைய படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது
மகேஷ் பாபு-க்கு டோலிவுட்டில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
'RRR' படத்துக்கு பிறகு ராம் சரண் உலக புகழ் பெற்ற நடிகராக மாறியுள்ளார். ஒரு படத்துக்கு ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்
நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் ஒரு படத்துக்கு ரூ.80 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சினிமா ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் உள்ளது.
"RRR" படம் ஜூனியர் NTR-க்கு உலக அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது.இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.60 கோடி சம்பளம் வாங்குகிறார்.
விஜய் தேவரகொண்டாவுக்கு டோலிவுட்டில் நல்ல மதிப்பு உள்ளது. அவர் ஒரு படத்துக்கு ரூ.45 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது
நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் நானி, ஒரு படத்திற்கு ரூ.35 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெறுகிறது
ரவி தேஜா, அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை நடிப்பிற்கு பெயர் போனவர். தற்போது ஒரு படத்துக்கு ரூ.30 கோடி சம்பளம் பெறுகிறார்
Thanks For Reading!








English (US) ·