ARTICLE AD BOX
மும்பையில் 2001-ல் ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தார் ஜன்னத் ஜுபைர். இவரது தந்தை - தாயார் இருவரும் நடிகர்கள் ஆவார். மேலும், ஜன்னத்தின் தந்தை குடும்பத்தினர் லக்னோவில் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு அரசு குடும்ப பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது
5 வயதிலே நடிப்புக்கான ஆடிஷனில் பங்கேற்றவர் ஜன்னத் ஜுபைர். இவர் தனது 8 வயதில் Kashi – Ab Na Rahe Tera Kagaz Kora என்கிற இந்தி தொடர் மூலம் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்தார். பிறகு, 2011ல் ஒளிப்பரப்பான Phulwa தொடரை அவரை டிவி துறையில் பிரபலமான நபராக மாற்றியது
இந்தி தொலைக்காட்சியில் ஜன்னத் ஜுபைர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சீரியல் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று வருகிறார். 'கத்ரோன் கே கிலாடி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது
ஜன்னத் ஜுபைருக்கு மக்களிடையே இருக்கும் பாப்புலாரிட்டி காரணமாக இந்தி சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தது. ராணி முகர்ஜி கதாநாயகியாக நடித்த 'ஹிச்கி' படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். பிற இந்தி மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்
ஜன்னத் ஜுபைருக்கு சிறந்த தொழிலபதிபர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அவர் இளம் வயதிலே சொந்தமாக ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஹிஜாப் மற்றும் அபாயா ஆகிய ஆடைகள் நல்ல தரத்தில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது
நடிப்பு மட்டுமின்றி சிறந்த பாடகியாகவும் ஜன்னத் திகழ்கிறார். அவரது குரலில் வெளியான Ishq Farzi பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுதவிர, மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரது நடிப்பில் பல மியூசிக் ஆல்பம் வெளியாகியுள்ளன
ஜிம்முக்கு தவறாமல் சென்று கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வமிக்கவர். அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸை சமூக வலைகதளத்தில் அடிக்கடி பகிர செய்வார்
ஜன்னத் ஜுபைரின் நிகர சொத்து மதிப்பு ரூ.250 கோடி என கூறப்படுகிறது. அவர் 21 வயதிலே பல கோடி மதிப்பிலான வீட்டை கட்டியுள்ளார். மேலும், சோசியல் மீடியாவில் ஒரு பதிவிற்கு ரூ.2 லட்சம் வரையும் பெறுகிறார். அவரிடம் Jaguar XJL, Audi Q7 மற்றும் Ford Endeavour ஆகிய சொகுசு கார்கள் உள்ளன
Thanks For Reading!







English (US) ·