Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது!" - பட விழாவில் விஷ்ணு விஷால்!

2 months ago 4
ARTICLE AD BOX

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

Aaryan Movie Press MeetAaryan Movie Press Meet

``சமீபத்தில், நடிகர்கள் எவரும் எனக்கு உதவி செய்யவில்லை என வருத்தமாக பேசியிருந்தீர்களே!" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தந்த விஷ்ணு விஷால், ``நடிகர்கள் எவரும் எனக்கும் உதவி பண்ணலனு நான் சொல்லல. என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது.

என்னுடைய ஒவ்வொரு படத்தையும் முடிக்கிறதுக்கு ரெண்டு வருஷம் ஆகிடுது. கட்டா குஸ்தி' திரைப்படம் 6 தயாரிப்பாளர்களுக்கு மாறிடுச்சு.

எஃப்.ஐ.ஆர்' திரைப்படத்துக்கு 3 தயாரிப்பாளர்கள் மாறிட்டாங்க. `ராட்சசன்' படத்துக்குப் பிறகு எனக்கு 9 படம் டிராப் ஆகியிருக்கு. அதனுடைய வலியும், வருத்தமும் எனக்கு இருக்கு. அதனாலதான் முழு நேர தயாரிப்பாளராக மாறினேன்.

அதனால என்னுடைய அடுத்த 5 படத்தை என்னுடைய நிறுவனத்துலதான் பண்ணணும், வேற இடத்துல பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

நான் பெரிதும் அட்மைர் பண்ற நடிகர்களும் என்னுடைய படம் ரிலீஸ் சமயத்துல எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணவே இல்ல. அந்தப் படம் நல்லா போனதுக்குப் பிறகு என்னுடைய டைரக்டர்கிட்ட பேசிடுவாங்க.

ஆனா, எனக்கு கால் வராது. நான் இப்போ சமீபத்துல ரெண்டு படம் பார்த்தேன். அந்தப் படம் எனக்கு பிடிச்சிருந்தது நான் அந்த டீம் கிட்ட பேசினேன்.

அதுபோல, என்னுடைய படம் வரும்போது யாரும் வாழ்த்தினால் எனக்குள்ள சந்தோஷம் ஏற்படுமே, அது எனக்கு நடந்ததே கிடையாது." என்றார்.

Aaryan Movie Press MeetAaryan Movie Press Meet

இதைத் தொடர்ந்து ஆமீர் கான் கூலி' திரைப்படம் தொடர்பாக பேசியது குறித்து விஷ்ணு விஷால், `` ‘கூலி' படத்தில் நடித்தது தவறு என அமீர் கான் சார் பேசினார் என பரவிய செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை அவருக்கே அனுப்பி கேட்டேன்.

அவர் அப்படியெல்லாம் கூறவில்லை என உடனே ஒரு அறிக்கை வெளியிட்டார். ரஜினிகாந்த் சார் மீதிருந்த அன்பின் காரணமாக வந்து கூலி' படத்தில் நடித்திருக்கிறார்.

அந்தக் காட்சியில் நடித்தது என்பது அவருக்கு சந்தோஷமான ஒன்றுதான். அவருக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை." எனக் கூறினார்.

Read Entire Article