ARTICLE AD BOX
மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
2025 பத்ம விருதுகள் இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அஜித் குமாருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அஜித்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
Padma Awards: ``மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்..'' - பத்ம விருது பெற்ற செஃப் தாமுஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ பத்மபூஷன் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் திரு. அஜித் குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.
பவன் கல்யாண், அஜித் குமார் திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா- 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் திரு அஜித் குமார் அவர்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Padma Awards: அஜித் குமார், அஷ்வின், செஃப் தாமு, பறையிசை வேலு ஆசான்; பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8






English (US) ·