Ajith: மகனின் ஃபுட்பால் ஆசைக்காக அஜித் செய்த செயல்; வெனிஸில் ஷாலினி பிறந்தநாள் கொண்டாட்டம்!

1 month ago 2
ARTICLE AD BOX

ஒரு புறம் அப்பா அஜித் குமார் கார் ரேஸராக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம், மகன் ஆத்விக் குமார் ஃபுட்பால் பிளேயராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆத்விக் குமார் பிரபல ஃபுட்பால் பிளேயர் ரொனால்டோவின் பரமரசிகன். கடந்த அக்டோபர் மாதம் கோவாவில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற இருப்பதாகவும் அதில் ரொனால்ட் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

அன்று முதல் ஆத்விக் குமாருக்கு பயங்கர குஷி கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

Ajith Kumar - Family க்ளிக்ஸ்!Ajith Kumar - Family க்ளிக்ஸ்!

தனது அம்மா, அப்பாவிடம் ஆதர்ஷ நாயகன் ரொனால்டோவை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.

ரொனால்டோவை நேரில் சந்தித்து தனது அன்பைக் வெளிப்படுத்தவும் ஆர்வமாக காத்துக் கொண்டு இருந்தார். தன்னைப் போலவே மகன் ஆதவிக்கும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து அஜீத்துக்கு அகமகிழ்ச்சி. அன்புமகன் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் களத்தில் இறங்கினார், அஜித்.

தனது குடும்பம் + நண்பர்கள் என்று மொத்தம் 30 பேருக்கு ரொனால்டோ தங்க இருந்த அதே ஸ்டார் ஹோட்டலில் அறையை முன்கூட்டியே அட்வான்சாக புக் செய்தார்.

அடுத்து சென்னையில் இருந்து கோவாவுக்கு செல்ல பக்காவாக விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்து இருந்தனர். கடைசி நேரத்தில் ரொனால்டோ தனது இந்திய வருகையை ரத்து செய்தார்.

திடீரென எதிர்பாராத விதமாக ரொனால்டோ வருகை கேன்சல் ஆனதால், அஜித் மகன் ஆத்விக் அப்செட் ஆகி விட்டாராம். அவரை "நாம பேமிலியோட வெளிநாடு ட்ரிப் போறோம்" என்று ரிலாக்ஸ் செய்திருக்கிறார் அஜித்.

அதன்பிறகு கோவாவில் ஸ்டார் ஹோட்டல் புக் செய்யப்பட்டு அறைகள், குடும்பம் + நண்பர்களின் விமான டிக்கெட்டுகள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டது.

Ajith Family Ajith Family

அஜித்குமார் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அதற்கான பரிசை பெற நவம்பர் 18-ம் தேதி வெனிஸ் செல்கிறார். அவர் மட்டுமல்ல, குடும்பத்தோடு வெளிநாடு செல்ல திட்டமிட்டு வருகிறார்.

நவம்பர் 18-ம் தேதி குடும்பத்தோடு வெனிஸ் செல்கிறார். அங்கே 19-ம் தேதி கார் ரேஸருக்கான பரிசு பெறுகிறார், அஜித். அதன் பிறகு 20-ம் தேதி அன்று ஷாலினிக்கு பிறந்தநாள் வருகிறது.

அஜித் குடும்பத்தாரும், ஷாலினி குடும்பத்தாரும் இணைந்து ஷாலினி பிறந்த நாளை பிரமாண்டமாக வெனிஸ் மண்ணில் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

கார் ரேஸ் பரிசு பெறும் அஜித்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... அதுபோலவே பிறந்த நாள் காணும் ஷாலினிக்கும் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Read Entire Article