ARTICLE AD BOX
இயக்குநர் அட்லி இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியாகி அதிரடியான வெற்றி பெற்றது ஜவான் திரைப்படம். பாலிவுட்டுக்கு சென்று இப்படத்தின் மூலம் ஷாருக்கானுக்கு ஹிட் கொடுத்தவர் அடுத்தும் பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்களெல்லாம் பேசப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சமீப நாட்களாக அட்லீ, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார் எனப் பேசப்பட்டு வந்தது.
Allu Arjunஆனால், அட்லீயோ தனது அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக வீடியோவை மட்டும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இதைத் தாண்டி திரைப்படம் தொடர்பாக எந்த விஷயத்தையும் அவர் எங்கும் பேசவில்லை.
தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுனும் `புஷ்பா' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
படத்திற்கு `கட்சி சேர', `ஆசைக்கூட' போன்ற சுயாதீன பாடல்களின் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகவில்லை.
Sai Abhayankarராகவா லாரன்ஸின் `பென்ஸ்' , சூர்யாவின் 45-வது திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிதக்கது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indian 2: "கமல் சாருடன் பணியாற்ற வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் 2 கதை தெரியும்!" - அட்லிசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8






English (US) ·