AR Rahman: "தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இசைக் கலைஞர்களின் வாய்ப்பை பறிக்கிறேனா? - ரஹ்மான் பதில்

8 months ago 8
ARTICLE AD BOX

நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுப் பயன்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் ரஹ்மான். இசைத் துறையில் புதிதாக வரும் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் அவரது ஸ்டுடியோவில் வாங்கி வைத்துவிடுவார். சமீபத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'லால் சலாம்' படத்தில் மறைந்த சாகுல் ஹமீது குரலில் பாடலை உருவாக்கியிருப்பார்.

பாடகர்களுக்குப் பதிலாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுவதை ஒர தரப்பினர் வியந்து பாராட்டினாலும், பாடகர்களுக்கு வாய்ப்புகள் பறிபோவதாகவும், தொழில்நுட்பத்தில் மறைந்த பாடகர்களை மீண்டும் பயன்படுத்தாமல், புதிய பாடகர்களுக்கு வாய்ப்புத் தரலாம் என்றும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட சமீபத்தில், ``பாடகர்கள் இவ்வளவு பேர் இங்கு இருக்கும்போது நான் ஏன் 'AI' பயன்படுத்திப் பாடலை உருவாக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான்

இப்படி AI மூலம் மறைந்த பாடகர்களின் குரலில் மீண்டும் பாடல் உருவாக்காமல், அதற்குப் பதிலாக உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற கருத்துகள் வலம் வந்த வண்ணமிருக்கின்றன.

இதே கருத்தை கூறி ஏ.ஆர்.ரஹ்மானை தாக்கிப் பேசியிருக்கும் பாலிவுட் பாடகர் அபிஜித், "ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர்களுக்கும், இசைக் கருவிகளை வாசிப்பவர்களுக்கும் பதிலாக தொழில்நுட்பத்தையே வைத்து இசையமைத்து வாய்ப்புகளைப் பறிக்கிறார்" என்று விமர்சித்திருந்தார்.

அதற்கு நேர்காணல் ஒன்றில் பதிலளித்திருக்கும் ரஹ்மான், "பாடகர் அபிஜித்துடன் நல்ல நட்பு இருக்கிறது. அவருக்கு நான் கேக்கூட அனுப்பியிருக்கிறேன். இன்னும் அவர் மீது எனக்கு அன்பு இருக்கிறது. அது அவருடையக் கருத்து.

ஆனால், நான் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகிறேன். பாடகர்களின் திறமையான குரல் நுட்பங்களை AI செய்துவிட முடியாது. நான் சமீபத்தில் துபாயில் 60 பெண்கள் கொண்ட ஒரு பெரிய இசைக்குழுவை அமைத்திருக்கிறேன். பொன்னியின் செல்வன், Chhaava படங்களில் 200, 300 இசைக் கலைஞர்களை வைத்து இசையமைத்தேன்.

AR ரஹ்மான்

ஒரு சில பாடல்களில் 100 இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இப்படி பலருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறேன். அதை வெளியில் சொல்வதில்லை அவ்வளவுதான்" என்று மனம் விட்டு பதிலளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசரா

Read Entire Article