ARTICLE AD BOX
வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வரும் 24ம் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ வெளியானது. அதில். இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது.
வெற்றிமாறனுடன்..படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். 'அரசன்' புரொமோ வீடியோ மூலம் கௌரவ வேடத்தில் நடித்திருந்த இயக்குநர் நெல்சனுக்கும், வெற்றிமாறனுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு பலப்பட்டுள்ளது. ஆகையால், நெல்சன் 'அரசன்' படத்திலும், ஒரு ரோல் செய்தால்கூட ஆச்சரியமில்லை. தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வடசென்னை கதைக்களமாக கொண்டது.
இளம் வயது சிலம்பரசனின் கேரக்டருகாக அவரிடம் 12 கிலோ உடல் எடையை குறைக்கச் சொல்லியிருந்தார் வெற்றி. இதற்காக சில வாரங்களுக்கு முன்னரே துபாய் பறந்த சிலம்பரசன், அங்கே ஆக்ஷன் காட்சிகளுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந்த வாரக் கடைசியில்தான் சென்னை திரும்புகிறார். தனது ஃபிட் அண்ட் கட் தோற்றத்தை தான் சமீபத்தில் தெறிக்கவிட்டிருந்தார் சிலம்பரசன்.
எஸ்.டி.ஆர்.முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு வரும் 24ம் தேதி சென்னை காசிமேடு பகுதியில் 'அரசன்' சீறிப்பாய தயாராகி வருகிறது. இந்த ஷெட்யூலில் லைவ் லொக்கேஷன்கள் அதிகம் இருக்குகின்றன. சிலம்பரசனுடன், சமுத்திரகனி, கிஷோர் காம்பினேஷன் இருக்கலாம். ஆக்ஷன் காட்சிகளைத்தான் முதலில் படமாக்குகின்றனர்.
படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

1 month ago
2







English (US) ·