ARTICLE AD BOX
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' படத்தின் பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த `அரசன்' திரைப்படமும் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன் தொடர்புடையதுதான் என வெற்றிமாறன் அப்டேட் கொடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியிருக்கிறார்.
Arasan - Simbu இப்படத்தின் புரோமோ வீடியோ படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதாக புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.
அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் - சிம்பு இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், திரையரங்கம் மற்றும் யூட்யூப் என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு புரோமோ ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு. இன்றைய தினம், திரையரங்குகளில் `அரசன்' படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். நாளை காலை யூட்யூபில் வெளியாகிறது.
இயக்குநர் நெல்சனும் இந்த புரோமோவில் நடித்திருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய படங்களின் புரோமோ வீடியோக்களில் மட்டுமே நடித்து நம்மை என்டர்டெயின் செய்த நெல்சன், தற்போது இப்படத்தின் ப்ரோமோ வீடியோவிலும் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
Vetrimaaran3 கொலைகளை செய்ததற்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் சிம்பு தன்னுடைய கதையை படமாக நெல்சனிடம் எடுக்க சொல்வதைதான் இந்த காணொளியின் உள்ளடக்கம்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் புரோமோவில் தனுஷ் ரெஃபரென்ஸ் வைத்திருப்பதை ஹைலைட் விஷயமாக ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரித்துக் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களுடன் இணைந்து திரையரங்குகளில் இந்த புரோமோ காணொளியை விரும்பியதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக வரவில்லை என சிம்பு பேசிய காணொளியையும் இந்த வீடியோவில் இணைந்திருக்கிறார்கள்.
திரையரங்குகளில் நீங்கள் `அரசன்' பட ப்ரோமோவைப் பார்த்திருந்தால், உங்களுக்குப் பிடித்த விஷயங்களை கமென்டில் பதிவிடுங்கள்.
2 months ago
4






English (US) ·