ARTICLE AD BOX
குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் ரசிக்கப்பட்ட அர்ஜுன் தாஸ் விழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
குட் பேட் அக்லி விழாArjun Das பேச்சு:
"எங்க இருந்து ஆரம்பிக்கிறதுனு தெரில. இன்னைக்கு சுரேஷ் சந்திரா சார் டீம் நிக்குற இடத்துலதான் 11 வருஷத்துக்கு முன்னாடி நான் நின்னுட்டு இருப்பேன். இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன். அஜித் சார் 2013-ல இருந்து என் மேல நம்பிக்கை வச்சிருக்கார். அவர்தான் இந்த படத்துக்காக என்னை ஆதிக்கிட்ட சொல்லியிருக்கார்.
ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக கையாண்டதற்கு பிரியாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். நான் அஜித் சாரோட எல்லா படத்தோட போஸ்டரையும் நான் ஷேர் பண்ணுவேன். அப்படி ஒரு நாள் சுரேஷ் சந்திரா சார் எனக்கு கால் பண்ணி, `ஆதிக் மீட் பண்ணனும்னு சொன்னாரு போய் பாருங்கனு’ சொன்னாங்க. அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது." எனக் கூறியுள்ளார் அர்ஜுன் தாஸ்.
அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர் இணைந்து நடனமாடிய `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக அர்ஜுன் தாஸ் குறித்துப் பேசிய பிரியா வாரியர், `அவர் இதுவரை செய்யாத புதிய முயற்சிகளை இந்த படத்தில் மேற்கொண்டுள்ளதாக’ பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்யூட் வீடியோ
8 months ago
8






English (US) ·