ARTICLE AD BOX
அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாள சினிமாவில் மோஸ்ட் வான்டெட் நடிகராக வளர்ந்து நிற்கிறார் பேசில் ஜோசஃப்.
இவர் கடைசியாக நடித்திருந்த 'பொன்மேன்', 'மரணமாஸ்' என இரண்டு திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தன.
சிவகார்த்திகேயனுடன் தமிழில் 'பராசக்தி' படத்திலும் தற்போது பேசில் ஜோசஃப் நடித்து வருகிறார்.
Basil Josephநடிகர், இயக்குநர் என இரண்டிலும் பெரும் வெற்றியைக் கண்ட அவர் தயாரிப்பாளராகவும் களமிறங்கவுள்ளார்.
அவர் அடுத்ததாக இயக்கப் போகும் திரைப்படத்திற்கு மலையாள சினிமா ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தயாரிப்பு பக்கம் இறங்குவதாக அறிவித்திருக்கிறார் பேசில் ஜோசஃப்.
அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பேசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட் எனப் பெயரிட்டிருக்கிறார்.
இது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கக் கணக்கில், "இதுவரை நான் செய்யாத ஒன்றை முயற்சிக்கிறேன் - ஆம், திரைப்படத் தயாரிப்பிற்குள் வருகிறேன்.
நான் கதைகளை மிகவும் சிறப்பாக, தைரியமாக, புதிய வழிகளில் சொல்ல விரும்புகிறேன்.
இந்தப் புதிய பாதை நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்பதைப் பார்ப்போம். பேசில் ஜோசஃப் என்டர்டெயின்மென்ட்டுக்கு வரவேற்கிறோம்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவுக்காக பிரத்யேகமாக 'மின்னல் முரளி' பட ரெஃபரன்ஸ் வைத்து ஒரு அனிமேஷன் காணொளியையும் தயார் செய்திருக்கிறார் பேசில் ஜோசஃப்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·