Bison: ``உன் படைப்பைப் பார்த்து பெருமைப்படுகிறேன்'' - மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்னம்

1 month ago 3
ARTICLE AD BOX

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.

இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

'பைசன்''பைசன்'

அந்தவகையில் இயக்குநர் மணிரத்னம் 'பைசன்' படத்தைப் பார்த்து மாரிசெல்வராஜை பாராட்டியிருக்கிறார்.

இதனை மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். "இப்போது தான் படத்தைப் பார்த்தேன் மாரி. ரொம்ப பிடித்திருந்தது. நீதான் அந்த 'பைசன்'.

பைசன்: "இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன" - துருவ் விக்ரம்

உன் படைப்பைப் பார்த்து பெருமைப்படுகிறேன். இதனைத் தொடர்ந்து செய். உன் குரல் முக்கியமானது" என்று மணிரத்னம் பாராட்டி இருக்கிறார்.

மாரிசெல்வராஜ்மாரிசெல்வராஜ்

"பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்" என்று மாரிசெல்வராஜ் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Hi Mari,
Just saw the film. Liked it a lot. You are the Bison. Proud of your work. Keep it going. This voice is important.
- Director Mani Ratnam
பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும்… pic.twitter.com/JlHXUaLD3Q

— Mari Selvaraj (@mari_selvaraj) October 28, 2025
Read Entire Article