Bison: ``சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு" - `பைசன்' நிஜ நாயகன் மணத்தி கணேசன்

2 months ago 4
ARTICLE AD BOX

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ், பசுபதி, அனுபமா, அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது பைசன். இந்த நிலையில், படத்தில் துருவ் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் உண்மை நாயகன் மணத்தி கணேசன் இப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

Bison - பைசன்Bison - பைசன்

படம் பார்த்துவிட்டு ஊடகத்திடம் பேசிய மணத்தி கணேசன், ``கபடியில் என்னுடைய உழைப்பை படத்துல இயக்குநர் அற்புதமாக பண்ணிருக்காரு. துருவ் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சிருக்காரு.

சினிமா ரொம்ப ஈஸினு நான் நெனச்சேன். நாங்க ஸ்போர்ட்ஸ்ல எப்டி கஷ்டப்பட்டோமோ அதேமாதிரி சினிமா துறைல ரொம்ப கஷ்டப்பட்டு படத்த எடுத்துருக்காங்க.

Bison: "ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயம்" - பைசன் குறித்து மாரி செல்வராஜ்

1994-ல் விளையாடிட்டு வந்தப்போ என்ன மகிழ்ச்சி அடைந்தேனோ அதை என் தம்பி மாரி செல்வராஜ் ரொம்ப சிறப்பா காமிச்சிருக்காரு. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஸ்போர்ட்ஸ் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டதுனு இதுல காமிச்சிருக்காரு.

ஆசிய விளையாட்டு போட்டிகள்ல ஜெயிச்சப்போ எந்த அளவுக்கு மகிழ்ச்சியா இருந்தேனோ அதைவிட ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்.

மணத்தி கணேசன்மணத்தி கணேசன்

சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒன்றை மாரி இன்னைக்கு பண்ணிருக்காரு. என் தம்பி என்னோட உயிர்ல கலந்துருக்காரு. துருவ் ஒருநாள்கூட முடியாதுனு சொன்னதில்ல.

நாங்க விளையாடுற அப்போ மண் தரைல விளையாடுனோம், இப்போ மேட் கோர்ட் (mat court) கபடில தமிழ்நாடு டீம் சிறப்பா இருக்கு.

தெற்குல தூத்துக்குடி, திருநெல்வேலி கபடி விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நான் கேட்டுக்றேன்" என்று கோரிக்கை வைத்தார்.

Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
Read Entire Article