Coolie : ஹோலி பண்டிகை அன்று 'கூலி' வீடியோ? 'ஜெயிலர் 2' ஷூட் எப்போது! - ஆச்சரிய அப்டேட்

9 months ago 10
ARTICLE AD BOX

ரஜினிக்கு இந்த மார்ச் மாதம் ரொம்பவே ஸ்பெஷான மாதமாகும். இந்த மாதத்தில் தான் ஹோலி பண்டிகை வருகிறது. அவரது வாழ்க்கையில் வண்ணமயமான திருப்புமுனையை ஏற்படுத்திய பண்டிகை என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். ரஜினி இப்போது நடித்து வரும் 'கூலி' படத்தின் அப்டேட் ஒன்று இந்த பண்டிகை தினத்தில் தான் வெளியாகலாம் என்ற செய்தி பரவியது. ஆனால்.. அந்த அப்டேட் தள்ளிப்போகலாம் என்று சொல்கின்றனர். என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிறீர்களா! இதைப் படிங்க.

ஸ்ருதி

ரஜினி இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' போல இதிலும் மல்டி ஸ்டார்களின் கூட்டணி இருக்கிறது. ரஜினியுடன், அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஷோபின் ஷாகீர் என பலரும் நடித்துள்ளனர. ஒரு பாடலுக்கு பூஹா ஹெக்டே நடனம் ஆடுகிறார்.

சத்யராஜூடன்.. லோகேஷ்
Coolie: ரஜினியின் கூலி படத்தில் நான் நடிக்கிறேனா?- சந்தீப் கிஷன் அளித்த விளக்கம்

ரஜினியின் திரைப்பயணத்தில் வசூல் ரீதியாக அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாக 'ஜெயிலர்' இருக்கிறது. அந்த வசூலை முறியடித்து சாதனை பண்ணும் படமாக 'கூலி'யை கொண்டு வர வேலைகள் தடதடக்கிறது. 'ஜெயிலர்' படத்தில் தமன்னா 'காவலா' பாடலுக்கு ஆடியிருந்தார். அப்படி ஒரு சென்டிமென்ட்டில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டேவை ஆடவைத்துள்ளனர்.

'கூலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ரஜினி அவரது போர்ஷனை முடித்துக் கொடுத்து விடுவார் என்கின்றனர். அதன் பிறகு இதர நடிகர்களின் காட்சிகளோடு படப்பிடிப்பு நிறைவடைகிறது. அனேகமாக ஏப்ரலில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது.

அனிருத், லோகேஷ்.

இந்நிலையில் தான் வருகிற மார்ச் 14-ம் தேதி ஹோலி பண்டிகை அன்று 'கூலி' படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட திட்டமிட்டனர். எதற்கு அந்த பண்டிகை அன்று டீசரை வெளியிட திட்டமிட்டனர் என்கிறீர்களா? இதே போன்று ஒரு ஹோலியில் தான் ரஜினிகாந்த் என்ற பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்டிற்கு சூட்டப்பட்டிருக்கிறது. சிவாஜி ராவ்விற்கு அந்த பெயரை சூட்டியிருப்பவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ஒவ்வொரு ஹோலி பண்டிகை அன்று இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்து ஆசிப்பெறுவதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்திருந்தார். அந்த தினத்தை கொண்டாடும் விதமாக 'கூலி'யின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், இப்போது அதில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. டீசரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் இருக்கிறது.

ஏப்ரலில் 'கூலி' நிறைவடைந்தாலும் ஜூன் மாதத்தில் தான் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள்.

Read Entire Article