D Imman: "என்னுடைய எக்ஸ் பக்கத்திலிருந்து பதிவுகள் வந்தால்..." - இமானின் X கணக்கு ஹேக் செய்யப்பட்டது

9 months ago 8
ARTICLE AD BOX

இசையமைப்பாளர் டி இமானின் 'எக்ஸ்' தளம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில், "எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் (@immancomposer) ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹேக்கர் எனது கணக்கு தொடர்புடைய மின்னஞ்சலையும் மாற்றி இருக்கிறார். மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் எனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளையும் பதிவிட்டிருக்கிறார். எனது கணக்கை விரைவில் மீட்டுத் தருமாறு எக்ஸ் தள நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

இமான்

நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருப்பதால், என்னைப் பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. தற்போது என்னுடைய எக்ஸ் பக்கத்திலிருந்து எதாவது பதிவுகள் வந்தால் அதனை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். எக்ஸ் நிர்வாகம் உடனடியாக என்னுடைய கணக்கை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்களின் ஆதரவுக்கு நன்றி. எனது கணக்கைத் திரும்பப் பெற்றவுடன் உங்களுக்குத் தகவலைத் தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

`ரஜினியை சந்திக்க வெச்சிட்டா இமானுக்கு இதுதான் ட்ரீட்!' - இமான் - திருமூர்த்தி ஷேரிங்ஸ்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article