DD Next Level: "கெளதம் மேனன் சார்கூட 'உயிரின் உயிரே' ரீ கிரியேஷன்ல நடிச்சது..." - யாஷிகா ஆனந்த்

7 months ago 8
ARTICLE AD BOX

சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'டிடி ரிட்டன்ஸ்' இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சந்தானத்துடன் கஸ்தூரி, மாறன், யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில்‘டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில்

படத்தின் டிரெய்லர் வெளியான சமயத்தில் 'உயிரின் உயிரின்' பாடலை கெளதம் மேனனும், யாஷிகா ஆனந்தும் மீள் உருவாக்கம் செய்திருந்த காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது.

அந்தக் காட்சியைப் பற்றி யாஷிகா ஆனந்த் பேசுகையில், "சினிமா துறையே ஒரு பொழுதுபோக்கு துறைதான்.

ஏதாவது வித்தியாசமான வகையில் மக்களை திருப்திபடுத்த வேண்டும். படத்தில் ஒரு புகழ்பெற்ற பாடலை மீள் உருவாக்கம் செய்ததில் மகிழ்ச்சி.

அதுவும் அந்தப் பாடலை இயக்கிய இயக்குநருடன் செய்ததில் இன்னும் மகிழ்ச்சி. இதற்காக இப்படத்தின் இயக்குநர் ப்ரேம் ஆனந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரிஜினல் பாடலில் வருவதைப் போல கடற்கரையில் ஓடினேன்.

Yashika AnandYashika Anand

சொல்லப்போனால், கடற்கரையில் இரண்டு மூன்று முறை கீழே விழுந்தேன்.

அந்தக் காட்சியைப் பற்றிய மீம்களைப் பார்க்கும்போது எனக்கும் நகைச்சுவையாக உள்ளது.

டிரெய்லரிலேயே இப்படியான விஷயங்கள் இருக்குமென்றால் படத்தில் இன்னும் பல விஷயங்கள் இருக்கும். நீங்களும் அதை எதிர்பார்க்கலாம்.

கெளதம் மேனன் சாருடன் நடிப்பதே மிகப்பெரிய வாய்ப்பு. இதுவும் நல்ல அனுபவமாக இருந்தது." என உற்சாகத்துடன் கூறினார்.

Read Entire Article