Dhanush: ``தனுஷ் -ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் விவகாரம்.. பிரச்னை இதுதான்'' - ஆர்.கே.செல்வமணி ஓபன் டாக்

8 months ago 8
ARTICLE AD BOX

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தில் அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிப்பதற்குத் தேதி கொடுக்காமல் இருக்கிறார் எனச் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி வெளியிட்டிருந்தார்.

தனுஷ்

இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகளிடம் விசாரித்த ஆர்.கே.செல்வமணி, "தனுஷ் அவர்களுக்கு 3 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் தாங்களும், தங்கள் கணவரும் அளித்த புகார். ரூ.3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ரூ.16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம்.

எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே தனுஷ் அவரிடம் ரூ.16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Dhanush : இட்லி கடை ரிலீஸ் தள்ளிவைப்பு - 'குபேரா' பர்ஸ்ட்; 'இட்லி கடை' நெக்ஸ்ட் - பரபர அப்டேட்

இதற்கு ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தரப்பில், "பெற்ற முன் பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா?" என்று கேட்டிருந்தார்.

இன்று மதியம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, "தனுஷ் வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு படம் செய்துக் கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம், கால்ஷிட்தான் வாங்கித் தர வேண்டும்" என்று கூறிருந்தனர்..

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து சர்ச்சையாகி வரும் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசிய ஆர்.கே.செல்வமணி, "தனுஷ் - ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனப் பிரச்னையை நடிகர் சங்கத்தை வைத்துப் பேச வேண்டும். நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் சேர்ந்து பேசி அதைத் தீர்க்க வேண்டும். அதுதான் நல்லது.

ஆர்.கே.செல்வமணி

நாங்கள் அதைப் பேசும்போது நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. அப்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தினர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். 'நாங்கள்தான் நியாயம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் போனோம்' என்று அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால், அதைச் சொல்லாமல் அமைதி காக்கின்றனர். இதனால் நாங்கள் பலரையும் பகைத்துகொள்ளும்படியாக இருக்கிறது." என்று கூறியிருக்கிறார்.

Dhanush இயக்கத்தில் Ajith நடிக்கிறாரா? - Aakash Baskaran | Idly Kadai | Parasakthi| STR49 | SK | AK

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article