ARTICLE AD BOX
பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான்! அப்படி இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக மாரி செல்வராஜின் 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்', ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' என மூன்று தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன.
இந்த மூன்று திரைப்படங்களின் விகடன் விமர்சனத்தையும் இங்கு மொத்தமாகப் பார்ப்போமா...
பைசன்:
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'பைசன்' திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. வனத்தி கிராமத்திலிருக்கும் கிட்டானுக்கு கபடி மீது அளப்பரிய பிரியம். ஆனால், ஊரில் நடக்கும் யுத்தங்கள், தன்னுடைய அனுபவம் என கிட்டானின் கபடி ஆசைக்கு அவரின் தந்தை தடையாக இருக்கிறார்.
பைசன் படத்தில்...பிறகு, தனக்குப் போடப்பட்ட தடைகளை உடைத்து எப்படி கிட்டான் முன்னேறினார் என்பதுதான் துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தின் கதை.
'பைசன்' படத்தின் முழுமையான விமர்சனத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
டியூட்:
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' ஆணவக் கொலை, ஆணாதிக்க சிந்தனை என்பது போன்ற சோசியல் மெசேஜ் சொல்லும் திரைப்படமாக திரைக்கு வந்திருக்கிறது. சென்னையில், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வரும் அகனுக்கு அவருடைய மாமா மகள் குறள் ப்ரொபோஸ் செய்கிறார்.
Dude Review | டியூட் விமர்சனம்தொடக்கத்தில் குறளின் காதலை மறுக்கும் அகன், பின்பு, குறள் மீதான காதலைப் புரிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். பிறகு, அகன் மற்றும் குறள் வாழ்க்கையில் நிகழும் விஷயங்களே படத்தின் கதை.
'டியூட்' விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
டீசல்:
அறிமுக இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் திரைக்கு வந்திருக்கிறது 'டீசல்' திரைப்படம். டீசல் மாஃபியா செய்யும் மனோகர், பெற்றோரை இழந்த வாசுவை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார். தந்தையைத் தொடர்ந்து வாசுவும் டீசல் மாஃபியா களத்தில் குதிக்கிறார்.
டீசல் விமர்சனம் | Diesel Reviewஇவர்களுக்கு எதிரில் இதே தொழிலில் பாலமுருகன் களமிறங்குகிறார். இதற்குப் பிறகு இவர்களுக்கு இடையில் நிகழும் மோதலே இந்த 'டீசல்' படத்தின் கதை.
'டீசல்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2 months ago
4






English (US) ·