Diwali Releases: `தீபாவளி டிரீட்' - இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படைப்புகள்

2 months ago 4
ARTICLE AD BOX

இந்தாண்டு தீபாவளி ரிலீஸுக்கு பல திரைப்படங்கள் ரேஸில் களமிறங்கி இருக்கின்றன.

பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். இப்படி பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களெல்லாம் முழுமையான கொண்டாட்டத்தை மக்களுக்குக் கொடுக்கும்.

தீபாவளி ரிலீஸ்தீபாவளி ரிலீஸ்

அப்படி இந்தாண்டு பல திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்திருக்கிறது.

மாரி செல்வராஜின் `பைசன்', பிரதீப் ரங்கநாதனின் `டியூட்', ஹரிஷ் கல்யாணின் `டீசல்' உட்பட பல திரைப்படங்களும் திரைக்கு வந்து இருக்கின்றன. இதை தாண்டி ஓடிடி ரிலீஸிலும் இன்னும் சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதன் முழுப் பட்டியலை இங்கு பார்ப்போமா...

தியேட்டர் ரிலீஸ்:

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கும் `பைசன்' திரைப்படம், ஹரிஷ் கல்யாணின் `டீசல்', பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டியூட்', நட்டி நடித்திருக்கும் `கம்பி கட்ன கதை' ஆகியத் திரைப்படங்கள் ரிலீஸாகி இருக்கிறது.

மல்லுவுட்டில் அனுபமா, வினய் ஃபோர்ட் ஆகியோர் நடித்திருக்கும் `பெட் டிடெக்டிவ்' திரைப்படமும் இந்தாண்டு திரைக்கு வந்திருக்கிறது. இந்த வாரம் திரைக்கு வரும் `பைசன்', `பெட் டிடெக்டிவ்' என இரண்டு திரைப்படங்களிலும் அனுபமா நடித்திருக்கிறார்.

Bison Bison

டோலிவுட்டில், `கோர்ட்' திரைப்பட புகழ் பிரியதர்ஷி புலிகொண்டா, நடிகை நிகாரிகா நடித்திருக்கும் `மித்ரா மண்டலி' என்ற காமெடி திரைப்படமும் திரைக்கு வந்திருக்கிறது.

மேலும், நடிகர் சித்து ஜொனலக்கட்டா, நாயகிகள் ஶ்ரீநிதி ஷெட்டி, ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் `தெலுசு கடா' திரைப்படமும், கிரண் அப்பவரம் நடித்திருக்கும் `க்ராம்ப்' திரைப்படமும் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருக்கிறது.

இவையெல்லாம்தான் தீபாவளி டிரீட்டாக இந்த வாரம் தியேட்டருக்கு வந்திருக்கும் படங்கள்.

ஓடிடி ரிலீஸ்:

தமிழில், அதர்வா நடித்திருக்கும் ̀தணல்' திரைப்படம் இந்த வாரம் ̀அமேசான் ப்ரைம்' தளத்தில் வெளியாகியிருக்கிறது.டோலிவுட்டில், பெல்லம் கொண்டா ஶ்ரீனிவாஸ், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `கிஷ்கிந்தாபுரி'.

இப்படம் இந்த வாரம் ̀ஜீ 5' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனம் ஈர்க்கப்பட்டு, யூகே-வின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் என்ட்ரியாக அனுபப்பட்ட திரைப்படம் `சந்தோஷ்'.

SantoshSantosh

இந்தாண்டின் தொடக்கத்திலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் பிரச்னைகளில் சிக்கி இத்திரைப்படம் தாமதமானது.

இந்த வாரம் இத்திரைப்படம் ̀லயன்ஸ்கேட் ப்ளே' ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில் சில சிக்கல்களால் இப்படத்தின் ரிலீஸ் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதை தாண்டி, மலையாள நடிகர் ஆசிஃப் அலியின் `அபயந்திர குட்டவாளி' , ̀ஜீ5' தளத்திலும், ̀மிரேஜ்' திரைப்படம் ̀சோனி லைவ்' ஓடிடி தளத்திலும் வெளியாகியிருக்கிறது. `பகவத் சாப்டர் ஒன்: ராக்‌ஷஸ்' என்ற இந்தி திரைப்படமும் `ஜீ5' ஓடிடியிலும் இந்த வாரம் வெளியாகி இருக்கிறது.

மேலும், டைகர் ஷெரஃபின் ̀பாகி 4' திரைப்படம் ̀அமேசான் ப்ரைம்' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்த லிஸ்டில் எந்தப் படத்தைப் பார்க்க நீங்கள் ஆவலாக காத்திருக்கிறீர்கள்?
Read Entire Article