ARTICLE AD BOX
மாடலிங்கில் கவனம் செலுத்திய ஷெரினுக்கு 16 வயதிலேயே கன்னட சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002ல் வெளியான Police Dog படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்
அதே ஆண்டில் துருவா எனும் கன்னட படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவரது நடிப்புக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்திட, பிற மொழி திரைப்பட ஆஃபர்களும் குவிய தொடங்கியது
தமிழில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார். பிறகு, விசில், Student Number 1 போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.
2015ல் நண்பேன்டா படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஷெரின் பிரேக் எடுத்து கொண்டார். 9 ஆண்டுகளுக்கு பிறகு 2024ல் தில் ராஜூ படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
சினிமாவில் இருந்து விலகியிருந்த ஷெரின், DJ பயிற்சி எடுத்துகொண்டு பணியாற்ற தொடங்கினார். அவரை DJ Sherin என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். சென்னையில் நடந்த Best Friends Festival 2023 நிகழ்ச்சியிலும் பணியாற்றினார்
ஷெரினுக்கும் விலங்குகள் மிகவும் பிடிக்குமாம். அவர் Shih Tzu இன நாயை வளர்த்து வருகிறார். அதற்கு Jager என பெயரிட்டுள்ளார். நாயுடன் எடுக்கும் வீடியோவை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர செய்வார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த ஷெரின், 3வது ரன்னர் அப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, குக் வித் கோமாளி சீசன் 4-ல் பங்கேற்றார்
ஷெரினுக்கு சுற்றுலா செல்வது மிகவும் பிடிக்குமாம். புதிய இடங்களில் எடுக்கும் படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர செய்வார். அவரது இன்ஸ்டா பக்கத்தை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.
Thanks For Reading!







English (US) ·