ARTICLE AD BOX
அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காலேஜில் ஜாலியாக, கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், கரியர், குடும்பத்தின் நிலை பற்றி ஜாலியாகப் பேசியிருக்கிறது இப்படம். கல்வி பற்றியும் எவ்வளவு கஷ்டத்திலும் நேர்மையை கைவிடாத பெற்றோர் என அழுத்தமான மெசேஜை சொல்கிறது.
When Thalaivar did that cigarette style , I was done .
Thanks God pic.twitter.com/q9R15K1ClS
இந்நிலையில் பலரும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் இருவரையும் பாராட்டி வருகின்றனர். அவ்வகையில் 'டிராகன்' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி, இயக்குநர் அஸ்வத், பிரதீப், தயாரிப்பாளர் அர்ச்சனா மூவரையும் நேரில் தனது இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கும் பிரதீப், "தலைவர்தான் அந்த சிகரட்டை ஸ்டைலாகப் பிடிக்கும்போது, அவ்ளோதான். அதுவே போதும். கடவுளுக்கு நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.
Rajini sir : what a writing Ashwath ! Fantastic fantastic !!
nalla padam pannanum, padatha pathutu Rajini sir veetuku kooptu wish panni namma padatha pathi pesanum !! Ithu director aganum nu kasta patu ozhaikra ovoru assistant director oda Kanavu ! Kanavu neraveriya nal… pic.twitter.com/IFuHhNkqjY
மேலும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, "நல்ல படம் எடுக்க வேண்டும். படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் வீட்டுக்கு அழைத்து பாராட்டி நம் படத்தை பற்றி பேச வேண்டும் என்பது இயக்குநர் ஆக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொரு உதவி இயக்குநர்களின் கனவு. 'கனவு நிறைவேறிய நாள் இன்று'" என்று நடிகர் ரஜினியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Dragon: `தனுஷ் போலவே இருப்பது உங்களுக்கு ப்ளஸா, மைனஸா?' - கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதில்Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
8







English (US) ·