ARTICLE AD BOX
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் `டிராகன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. `லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்தில் கைகோர்த்திருந்தார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார்.
அனுபமா, காயது லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதுவரை இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், "டிராகன் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு சிலர் என் நம்பிக்கையை உடைக்க நினைத்தனர்.
ஆனால் 'நாங்கள் இருக்கிறோம் பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறிய உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் சில தவறுகள் செய்திருந்தால் மன்னித்து கொள்கிறேன். எனது அடுத்த படத்தை நிச்சயமாக இன்னும் சிறப்பாக கொடுப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா...' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
11







English (US) ·