ARTICLE AD BOX
`லவ் டுடே' படத்திற்குப் பிறகு மீண்டும் `டிராகன்' திரைப்படத்தின் மூலம் ஒரு சென்சேஷனல் ஹிட் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். `டிராகன்' திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' படமும் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன் உள்பட இப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் `டிராகன்' படத்தின் வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
அது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் அவர், ``இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் தருணத்திற்காக நம்பிக்கையுடன் நாங்கள் கற்பனை செய்துக் கொண்டிருந்தோம். அதை தற்போது அனுபவத்திருக்கிறோம். `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்'. பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு தகுதியானவர். அவர் அதிகமான உயரங்களுக்குச் செல்ல வேண்டும். பிளாக்பஸ்டர் திரைப்படமாக பல வசூல் சாதனை செய்துக் கொண்டிருக்கும் டிராகன் படத்தின் வெற்றியை `LIK' குழுவினர் கொண்டாடினோம். தேவையான மெசேஜ் சொல்லும் இத்திரைப்படம் மக்களின் ஃபேவரிட்டாகியிருக்கிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் ஃபயர் பெர்பாமென்ஸைக் கொடுத்திருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
8







English (US) ·