Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீப் செய்த விஷயம்!

2 months ago 4
ARTICLE AD BOX

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் பர்சனல் உதவியாளர் சேகர் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

`டிராகன்' திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.

அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் மிஸ் ஆகியிருக்கிறது.

 `டூட்' படம் `டூட்' படம்

இதை நினைவில் வைத்து, சேகருக்காக கேக் வெட்டி நினைவுக் கேடயம் வழங்கி ஸ்பெஷலாகக் கொண்டாடியிருக்கிறார் பிரதீப்.

இதனால் நெகிழ்ந்து போன உதவியாளர் சேகர், ``ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும், ஒருவரின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.

அந்த ஒரு நாள் என் வாழ்வில் ஒரு இனிமையான கணமாக இருந்தது. இன்று அந்த நாளில் நடந்த என் இனிமையான கணங்களைப் பதிவிடுகிறேன். மிக்க நன்றி." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

சேகர் குறித்து பிரதீப் ரங்கநாதன், ``சேகர் என்னுடைய பர்சனல் உதவியாளர். டிராகன்' படத்தில் என்கூட அவர் வேலை பார்த்திருந்தார்.

டிராகன்' படத்தோட 100-வது நாள் விழாவில் எல்லோருக்கும் ஷீல்ட் தயார் செய்திருந்தோம். சேகருக்குமே நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம்.

ஆனால், மேடையில் கூப்பிடும்போது அவருடைய பெயர் மிஸ் ஆகிடுச்சு. அந்த ஷீல்ட் அனைவருக்குமே ஒரு மொமன்டாக இருந்துச்சு. மேடையில் எடுத்துக்கிட்ட புகைப்படத்தை அனைவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டாங்க.

அன்னைக்கு சேகரை மேடையில் கூப்பிட முடியலையேனு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு.

அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். அவ்வளவு வேலை பார்த்த அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா ரொம்பவே தப்புனு நினைச்சோம். அதனால், அவருக்கு ஸ்பெஷல் ஷீல்ட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்." எனக் கூறியிருக்கிறார்.

Read Entire Article