ARTICLE AD BOX
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் முக்கியமானது ‘டுயூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம், ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘டியூட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அனைவருக்கும் வணக்கம், என்னுடைய முதல் படமான DUDE வெளியாகிறது.
DUDE அற்புதமான உணர்வும், உற்சாகமும், பதட்டமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். இந்த தருணத்தில், என் ஹீரோவின் (பிரதீப் ரங்கநாதன்) மக்கள் தொடர்பாளர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி. டியூட் உங்கள் புதிய நடிப்புத் தொகுப்பாக இருக்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.
மேலும், எனது தயாரிப்பாளர்களான நவீன் சார் மற்றும் ரவி சார் ஆகியோரின் உறுதியான ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. என்னை இயக்குநாக்கி அழகு பார்த்ததற்கும் நன்றி.
மேலும் எனது ஒளிப்பதிவாளர், என் சகோதரர், நிகேத் பொம்மி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. நீங்கள்தான் என்னை உருவாக்கினீர்கள். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு நிகேத் தேவை, நான் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு நிகேத் ஆக முயற்சிப்பேன்.
என் அன்பான சாய் அபயங்கருக்கு சிறப்பு நன்றி. நாங்கள் ஒன்றாக அறிமுகமாகிறோம். எங்கள் கூட்டணியை மக்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
சரத்குமார் சார், மமிதா பைஜு, ரோகிணி மேடம் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினரின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மேலும், சுதா கொங்கரா மேடம்... என்னை உங்கள் இயக்குநர் குழுவில் சேர்த்ததற்கு நன்றி
சாய் அபயங்கர் - பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்எனக்கு சினிமாவைத் கற்றுக்கொடுத்த ரஜினி சார், இயக்குனர் விக்ரமன், ஹிட்ச்காக், பில்லி வைல்டர், பாங் ஜூன்-ஹோ, நடிகர் வடிவேலு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
டியூட் என்பது ஒரு பொழுதுபோக்கு படம் என்றாலும், உணர்ச்சிபூர்வமான, அசல் படமாக இருக்கும். மேலும், டியூட் காதலைப் பற்றி பேசும் படம் அல்ல. இது காதல் உரிமை பற்றி பேசும் படம். உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இனிய டியூட் தீபாவளி வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீப் செய்த விஷயம்!
2 months ago
4






English (US) ·