Dude: "ஒரு சிலருக்கு படம் குறித்து மாற்று கருத்துகள் இருக்கலாம், ஆனால்.!" - பிரதீப் ரங்கநாதன்

2 months ago 5
ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'டுயூட்'.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று (அக்.22) நடைபெற்றது.

இதில் பேசிய மமிதா பைஜூ, "இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கீர்த்திஸ்வரன் அண்ணாவுக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. எனக்கான ஸ்பேஸைக் கொடுத்ததற்காக நன்றி.

 `டூட்' படம் `டுயூட்' படம்

இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய ஒவ்வொருத்தரும் எனர்ஜியைக் கொடுத்தார்கள்.

படப்பிடிப்புக்கு போகும்போதெல்லாம் இன்னைக்கு ஜாலியாக இருக்கப்போகிறோம் என்ற எண்ணம்தான் இருக்கும். மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.

ரீலிஸ், மீம்ஸ் எல்லார்த்தையும் பார்த்தேன். உங்களிடம் இருந்து எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. 'டுயூட்' படத்தை உங்களுடையப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் நன்றி" என்று பேசியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதீப் ரங்கநாதன், " தமிழ், தெலுங்கு, கன்னடம் எல்லா இடங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மமிதா ரொம்ப சிறப்பாக நடிப்பார். இந்தப் படத்தில் சின்ன சின்ன இடங்களில் கூட அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார். இப்படி ஒரு அருமையான படம் கொடுத்ததற்கு நன்றி கீர்த்திஸ்வரன்.

பிரதீப் ரங்கநாதன்பிரதீப் ரங்கநாதன்

இந்தப் படம் நிறைய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. ஒரு சிலருக்கு படம் குறித்து மாற்று கருத்துகள் இருந்தாலும் படத்தைப் பார்க்க பார்க்க அவர்களுக்கும் பிடித்துவிடும். என்னுடைய ரசிகர்கள் ரொம்ப நன்றி" என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article