ARTICLE AD BOX
எப்போதுமே பண்டிகை தேதி பட ரிலீஸ் பட்டியலில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸுக்கு அப்படி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஏதுமில்லை.
மாரி செல்வராஜ் இயக்கி, துருவ் விக்ரம் நடித்திருக்கும் 'பைசன்' வெளியாகிறது. பிரதீப் ரங்கநாதனின் 'DUDE' ரிலீஸாகிறது.
இந்த தீபாவளிக்கு டபுள் ரிலீஸாக, பிரதீப் ரங்கநாதனின் 'DUDE', 'LIK' இரண்டும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
LIK - BTS - Vignesh Shivanஆனால், தற்போது திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, இரண்டு படங்களின் வசூலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'LIK' படத்தை படக்குழுவினரே டிசம்பர் 18 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளிட்டிருக்கும் அறிவிப்பில், "இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும்.
எனவே அதை தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் ‘டூட்‘ படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைய வாழ்த்துகிறோம்.
எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் ‘டூட்‘ படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை.
மேலும், தற்போது திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, இரண்டு படங்களின் வசூலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.
எனவே அன்பின் அடையாளமாக, எங்கள் திரைப்படத்தை 2025 டிசம்பர் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம்.
எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களைத் தேடி வரவிருக்கின்றன." என்று கூறியிருக்கிறது.

2 months ago
4






English (US) ·