Empuraan: 'மிகவும் அற்புதமான படைப்பு' - எம்பூரான் படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

9 months ago 9
ARTICLE AD BOX

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்பூரான்' வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மலையாளம், தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

L2 Empuraan

இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலரைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் 'எம்பூரான்' படக்குழுவைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எனது அருமை மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எம்பூரான்' படத்தின் டிரெயிலரைப் பார்த்தேன். மிகவும் அற்புதமான படைப்பு. படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Watched the trailer of my dear Mohan’s @Mohanlal and @PrithviOfficial Prithvi ‘s film #Empuraan .. fantastic work , congratulations !!! I wish the team all the best for the release. God bless https://t.co/5GCUGAXEEf

— Rajinikanth (@rajinikanth) March 20, 2025

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read Entire Article