Good Bad Ugly: "AK64 -க்கு ஓப்பனாக வாய்ப்பு கேட்குறேன்" - பிரியா வாரியர் பேச்சு

8 months ago 8
ARTICLE AD BOX

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் திரைப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்த படக்குழு, இன்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றி விழாவை நடத்தியுள்ளது.

பிரியா வாரியர்

இயக்குநர் ஆதிக், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படத்தில் நடித்த நடிகையர் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் பங்கேற்று பேசிய பிரியா பிரகாஷ் வாரியர், "என்னுடைய இரண்டாவது தமிழ் படத்துக்கே இப்படியான வரவேற்பு கிடைச்சுருக்கு.

படத்துல AK64னு ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கீங்க ஆதிக். இந்த இடத்தில ஓப்பனாகவே வாய்ப்பு கேட்கிறேன். என்னையும் அந்த படத்துல நடிக்க வைக்க ரெக்கமன்ட் பண்ணுங்க.

அஜித் சாருடைய பிரியாணி மற்றும் ரைட் (Ride) இப்போ என்னுடைய பக்கெட் லிஸ்ட்ல இருக்கு. அவர் இப்போது ரேஸ்ல இருக்காரு. அவருக்காக நாங்க இங்க கடவுளை வேண்டிக்கிறோம்.

OG சிம்ரன் மேமுக்கு நன்றி சொல்லிக்கிறேன். தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்." எனப் பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி விழா

இந்த ஆண்டில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர்.

குட் பேட் அக்லி படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் இணையத்தில் வைரலாகியுள்ளார்.

`Met the Legend' - ஜோதிகாவை சந்தித்த கனடா நடிகை நெகிழ்ச்சி!
Read Entire Article