ARTICLE AD BOX
அஜித் நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்திருக்கிறார். இவரை தாண்டி அர்ஜுன் தாஸ், ப்ரசன்னா, சுனில், ப்ரியா வாரியர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் வரும் ப்ரியா வாரியரின் நடனக் காட்சிகள் ஒரு புறம் இணையத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்க மற்றொரு புறம் நடிகை சிம்ரன் கேமியோ செய்திருக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது.
Good Bad Ugly'வாலி', 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' படங்களை தொடர்ந்து இப்படத்தில் அஜித்துடன் சிம்ரன் நடித்திருக்கிறார்.
அவருடைய கதாபாத்திரத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் அஜித்துடன் நடித்ததுப் பற்றியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருகக்கிறார் நடிகை சிம்ரன்.
அவர், ''கேமியோ கதாபாத்திரமாக படத்திற்குள் வந்தேன். படத்திலிருந்து வெளியே செல்லும்போது உங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன். அஜித் சாருடன் மீண்டும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்தது ப்ளாஸ்ட்!
இப்படியான ஒரு ஃபன் பயணத்தைக் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், படக்குழுவினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

8 months ago
8






English (US) ·