Good Bad Ugly: `குட் பேட் அக்லி' படத்துக்கு வந்த சிக்கல்; தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

8 months ago 8
ARTICLE AD BOX

அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது 'குட் பேட் அக்லி'. ஏ.கே எனும் கேங்ஸ்டர் தனது பேட் முகத்தை குட்டாக மாற்றி மீண்டும் தனது மகனுக்காக பேட்டாக மாறுவதே இந்தப் படத்தின் ஒன்லைன். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் ஃபேன் பாயாக இருந்து இப்படத்தை எடுத்திருக்கிறார்.

படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Good Bad UglyGood Bad Ugly

அதிலும், ப்ரியா வாரியர் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு நடனமாடிய காட்சிகளெல்லாம் இணையத்தில் டாப் டிரெண்ட் அடித்திருக்கிறது.

'ஒரு அடார் லவ்' படத்திற்குப் பிறகு மீண்டும் 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் டிரெண்டிங் இடம்பிடித்து தமிழ் மக்களுக்கு பெரிதளவில் பரிச்சயமாகியிருக்கிறார்.

Good Bad Ugly: "படத்தின் வெற்றியை தலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அஜித் சார் சொன்னார்!'' - ஆதிக்

'இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்)', 'ஒத்த ரூபா தார்றேன் (நாட்டுப்புறப் பாட்டு)', 'என் ஜோடி மஞ்சக் குருவி (விக்ரம்)' ஆகியப் இளையராஜா பாடல்களை படத்தின் முக்கியக் காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுபப்பட்டிருக்கிறது.

IlaiyarajaIlaiyaraja
Good Bad Ugly: ``நான் பிரபு சாருடைய மருமகன்னு சில நேரங்கள்ல மறந்திடுவேன்!'' - ஆதிக் ரவிச்சந்திரன்

தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடும் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இல்லையெனில் அந்தப் பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

Read Entire Article