Good Bad Ugly: `போஸ்டர் ஒட்டின பையனால முடியும்போது, உங்களாலையும்..!' - நெகிழும் ஆதிக் ரவிச்சந்திரன்

8 months ago 8
ARTICLE AD BOX

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

"நான் ரொம்ப ஹைப்பர் ஆக்டிவ்"

இதில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "7வது படிக்குற பையன் இயக்குநராகணும்னு ஆசைபட்டு இன்னைக்கு இந்த இடத்துல இருக்கான்.

Good Bad Ugly EventGood Bad Ugly Event

அஜித் சாருடைய ரசிகனாக இல்லைனா நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரில. 'Mark my words. This boy will do big' னு அஜித் சார் போனி கபூர் சார்கிட்ட சொன்னாரு.

எப்படி அப்படி சொன்னீங்கன்னு அஜித் சார்கிட்ட கேட்டிருக்கேன். அவர் ஒரு சிரிப்போடா கடந்து போயிட்டார்.

ஸ்டாராக இல்லாமல் நடிகராக நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கார். என் மனைவி ஐஸ்வர்யாவைவிட உங்களுக்கத்தான் அதிகமான ஐ லவ் யூ சொல்லியிருக்கேன்.

நான் ரொம்பவே ஹைப்பர் ஆக்டிவ். கடைசி ஒரு வருஷம் எனக்கு ரொம்ப முக்கியமானது. இந்த ஒரு வருஷம் அமைதியாக இருந்தேன்.

Good Bad Ugly - GBU Mamey SongGood Bad Ugly - GBU Mamey Song

இந்த படத்தோட டைட்டில் அஜித் சார் சொன்னதுதான். இன்னைக்கு சார் ரேஸ்ல இருக்காரு...

ஜிவி சார் மூலமாகத்தான் நான் இயக்குநரானேன். இந்தப் படத்தை சேலஞ்சாக எடுத்துட்டு மியூசிக் போட்டுக் கொடுத்திருக்கார்.

அஜித் சொன்ன அட்வைஸ்

இந்தப் படத்தோட வெற்றிக்கு நான் ஒரு பகுதிதான். அஜித் சார்தான் முக்கியமான காரணம்.

ரிலீஸுக்குப் பிறகு அஜித் சார் கிட்ட பேசினேன். வெற்றியை தலைக்கு எடுத்துக்காதீங்க. தோல்வியை மனதுக்கு கொண்டு போகாதீங்கன்னு சொன்னாரு.

போஸ்டர் ஒட்டின ஒரு பையனால இந்த விஷயம் பண்ண முடிஞ்சிருக்கு. கண்டிப்பாக எல்லோராலையும் எல்லா விஷயங்களும் பண்ண முடியும்." எனப் பேசினார்.

Good Bad Ugly: "AK64 -க்கு ஓப்பனாக வாய்ப்பு கேட்குறேன்" - பிரியா வாரியர் பேச்சு
Read Entire Article