HBD Ajith Kumar: கேமராக் காதலன், பைக் சேகரிப்பு!; அஜித் பற்றி பலரும் அறிந்திடாத பர்சனல் தகவல்கள்!

7 months ago 8
ARTICLE AD BOX

நடிகர் அஜித்தின் 54-வது பிறந்தநாள் இன்று.

'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றி, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி, பத்ம பூஷன் விருது என பல ஸ்பெஷல் விஷயங்களோடு இந்தப் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித்.

அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்களை இங்குப் பார்க்கலாம்.

அஜித்குமார்அஜித்குமார்

* தன் வீட்டில் நெடுங்காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை அவர்களுக்கே உரிமையாக்கி பத்திரப்பதிவும் செய்து கொடுத்துவிட்டார்.

* அஜித் முன்பெல்லாம் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற நாள்கள் உண்டு. இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத காரணத்தால் அவர் அங்கே போய்  15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

Ajith: "அஜித் சார் விருது வாங்கினது பெருமை!" - நடிகை ஷாலினி பேட்டி

* ஆன்மீகம், ராசி, ஜோதிடம் பார்ப்பதில் நம்பிக்கை உண்டு. ஆனால் 'எம்மதமும் சம்மதம்' என்ற கொள்கையை பின்பற்றுவார். அந்த நம்பிக்கையையும் மற்றவர்களின் மேல் திணிக்க மாட்டார்.

* விதவிதமான பைக்குகளை பிரியமாக சேகரித்து வைத்திருக்கிறார் அஜித். இப்போதுள்ளதெல்லாம் நினைத்துக்கொண்டால் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். அடுத்த தடவை சிக்னலில் வாட்டசாட்டமாக பைக்கில் இருப்பவரை கவனியுங்கள். அஜித்தாக இருக்கலாம்.

அஜித்அஜித்

* பைக்கிலேயே 25 நாள் பயணமாக டேராடூன் வரை போய்விட்டு 9 நாள் பயணமாக கைலாஷ் போய் வந்திருக்கிறார். பயணத்தை விரும்புவதற்கு காரணங்களாக , '' புதுப் பயணிகள், பாதை மற்றும் எனக்குள் நான் செய்த பயணம் ''என்பார்.

* கேமராக்களின் காதலன். நண்பர்களையும், கூட நடிக்கிற எளிய நடிகர்களுக்கும் புகைப்படம் எடுத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்தி அனுப்புவதை விரும்புவார்.

Ajith: "மனதளவில் மிடில் கிளாஸ்தான்; சூப்பர் ஸ்டார், தல பட்டங்கள் என்றுமே வேண்டாம்" - அஜித் குமார்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article