ARTICLE AD BOX
நடிகை நித்யா மெனன் நடித்திருந்த `இட்லி கடை' திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது.
அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Nithya Menen`திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்காக கடந்தாண்டு தேசிய விருதையும் நித்யா மெனேன் பெற்றிருந்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் மாடுகளை கவனித்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து நேரடியாக தேசிய விருது வாங்கச்சென்றது குறித்தும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் நித்யா மெனேன், `` இது நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. என் நகங்களில் மண்ணுடன் நான் தேசிய விருது விழாவுக்கு நேரடியாகச் சென்றேன்.
அதற்கு முந்தைய நாள் படப்பிடிப்பில் என் கைகளால் சாணத்தை அள்ளினேன். இந்த விஷயம் முழுவதும் கவித்துவமாக இருந்தது.
நான் என் நண்பர்களிடம் ``கை நகங்களில் சாணம் படிந்திருந்ததோடு சென்று குடியரசுத் தலைவரிடம் நான் விருது பெற்றேன் எனக் கூறினேன்.
இந்தப் பதிவில் இருப்பவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர்கள், நல்ல நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் நாங்கள் எப்போதும் குடும்பமாக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

2 months ago
4






English (US) ·