ARTICLE AD BOX
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
படத்தின் வெளியீட்டையொட்டி மதரையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் தனுஷ் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் ஜாலியாகப் பேசியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்
"அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்; கதை சொல்லும்போது..."- 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசனின் அப்டேட் Idly Kadai: "மதுரை துலுக்க நாச்சியார் கோயிலில் மதநல்லிணக்கம்" - நடிகர் பார்த்திபன்நிறைய கதை தனுஷ் சார் கிட்ட இருக்கு
இதில் பேசியிருக்கும் நடிகர் அருண் விஜய், "தனுஷ் சாரும் நானும் நிறைய தடவ ரோட்டு கடையில சாப்பிட்டு இருக்கோம். 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கிறேன். அவருக்காக நான் இட்லி கடையில் நடிச்சேன். அவர் எனக்காக என்னோட 'ரெட்ட தல' படத்துல 'கண்ணம்மா' பாடல் பாடி கொடுத்தார். எங்க ரெண்டு பேருக்குள்ளையும் நல்ல நட்பு இருக்கு.
வேலைனு வந்துட்டா ரொம்ப ஒழுக்கமானவர். இந்தக் இட்லி கதை படம் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்குள்ள நிறைய தேடல்கள் இருக்கு. இன்னும் சூப்பரான நிறைய கதை தனுஷ் சார் கிட்ட இருக்கு. அதெல்லாம் படமாக பார்க்கனும்.
மதுரை எனக்கு ஒன்னும் புதுசில்ல. நான் மதுரை பொண்ணதான் கல்யாணம் பண்ணிருக்கேன்." என்று ஜாலியாகப் பேசியிருக்கிறார் நடிகர் அருண் விஜய்.

3 months ago
4






English (US) ·